மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, மறுஉத்தரவு வரும் வரை, பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வரும் விமானங்கள் மேற்கு வங்கத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

Related Stories: