×

கொரோனா கோரத்தாண்டவம் : 28 கோடி பேர் உலகம் முழுவதும் பாதிப்பு... 54 லட்சம் பேர் உயிரிழந்தனர்!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.41 கோடியை தாண்டியது. கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கோவிட் 19 தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.97கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 289,701,498 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 254,148,470 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 56 ஆயிரத்து 962 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 30,096,066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,072 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 55,864,519, உயிரிழப்பு -  847,162, குணமடைந்தோர் - 41,518,472
இந்தியா   -    பாதிப்பு - 34,887,983, உயிரிழப்பு -  481,519, குணமடைந்தோர் - 34,275,312
பிரேசில்   -    பாதிப்பு - 22,291,507. உயிரிழப்பு -  619,139, குணமடைந்தோர் - 21,567,845
இங்கிலாந்து- பாதிப்பு - 13,100,458, உயிரிழப்பு - 148,778, குணமடைந்தோர் - 10,365,262
ரஷ்யா            - பாதிப்பு -  10,519,733, உயிரிழப்பு - 309,707, குணமடைந்தோர் - 9,497,063

Tags : Corona Koratandavam , Corona claim: 28 crore people worldwide affected ... 54 lakh people lost their lives !!
× RELATED கொரோனா கோரத்தாண்டவம் : 28 கோடி பேர்...