கிறிஸ்துமஸ் தினத்தில் குளறுபடி மக்கள் கணக்கில் தவறுதலாக ரூ.1,310 கோடி போட்ட வங்கி

லண்டன்:  பிரிட்டனில் செயல்படும் பிரபல வங்கி  ‘சன்டான்டர்.’ கடந்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, இது தனது வங்கியில் இருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக ரூ.1,310 கோடியை பரிமாற்றம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறவனங்களின் வாடிக்கையாளர்கள் கணக்கில், 75 ஆயிரம் பரிமாற்றங்களின் மூலம் இந்த பணம் போய் சேர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று  தங்கள் வங்கி கணக்கில் பெரியளவில் பணம் வந்திருப்பதை பார்த்ததும், மக்கள்  எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். கிறிஸ்துமசுக்கு கிடைத்த பரிசாக இதை  நினைத்தனர். அதேநேரம், இந்த பணம் எதற்காக வந்தது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், பணம் தவறுலாக மாற்றப்பட்டதை கண்டுபிடித்துள்ள சன்டான்டர் வங்கி நிர்வாகம், இந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

Related Stories: