×

புல்வாமா தாக்குதல் 40 வீரர்களின் சாவுக்கு பழி தீர்த்தது ராணுவம்: கடைசி குற்றவாளியும் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் பேருந்தில் சென்றனர். அப்போது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த  அடில் அகமது தர் என்ற தீவிரவாதி  மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான். இதில்,   40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு திட்டங்கள் வகுத்தவர்கள், உதவிகள் செய்தவர்களை பாதுகாப்பு படைகள் கடந்த 3 ஆண்டுகளாக வேட்டையாடி வந்தன. இதில், கடைசி குற்றவாளியான ஜெய்ஷ் அமைப்பின் முக்கிய தளபதி சமீர் தர் என்பவன் மட்டும் சிக்காமல் இருந்தான்.

இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக்கில் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களை பாதுகாப்பு படைகள் அடையாள காண முயன்றபோது, அவர்களின் ஒருவன் சமீர் தர் போல் காணப்பட்டான். உடனே, அவன் உடலில் இருந்து மரபணு எடுக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அதில், அவன்தான் சமீர் தர் என்பது உறுதியானது. இதன்மூலம், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான கடைசி தீவிரவாதியையும் பாதுகாப்பு படை கொன்று பழி தீர்த்துள்ளது.


Tags : Army ,Pulwama , Pulwama attack, revenge army, last culprit, shot dead
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...