சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஆசாமி கைது

தண்டையார்பேட்டை, ஜன.2: காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்த 15 வயது சிறுமி பெற்றோருடன் வசிக்கிறாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடினர். எந்த தகவலும் இல்லை. இதனால் காசிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென சிறுமி வீட்டுக்கு வந்தாள். மகளை பார்த்ததும் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தாலும் கோபமும் ஏற்பட்டது.

மகளிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆசை வார்த்தை கூறி ஜோலார்பேட்டைக்கு அழைத்து சென்று அங்கு அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும், போலீசில் புகார் செய்த விவகாரம் வெங்கடேசனுக்கு தெரியவந்ததால் சிறுமியை ரயிலில் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. புகாரின்பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் மாலை வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: