பெண்களை ஏமாற்றிய ஆசாமி கைது

சென்னை: தி.நகரை சேர்ந்த பெண் அசோக்நகர் மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில், `மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், சென்னை வளசரவாக்கம் ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர், சாலிகிராமத்தில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த கடையில், நான் வேலை செய்தேன். அப்போது, என்னிடம் அவர் தவறாக நடக்க முயன்றார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த புகார் மீது அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், இவர் 2018ல் அசோக்நகரைச் சேர்ந்த பெண்ணிடம் காதலிப்பதாக பழகி ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, மதுரவாயலிலும் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி பழகி வந்துள்ளார். திருமங்கலத்திலும்  ஒரு பெண்ணிடம் காதல் செய்வதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகியுள்ளார். அவரிடமும் பல லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாரிமுனையில் பதுங்கியிருந்த ஆனந்தராஜை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: