வைகோ பேட்டி பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும்

சென்னை, ஜன.2: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் விவகாரத்தில் தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெற முடியும். 7 தமிழர்கள் விடுதலையில் பாஜ அரசு இரட்டை வேடம் போடுகிறது. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்த பிறகும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல. ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பாஜவுக்கு எதிராக வலுவான அணியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: