×

சீனியர் எஸ்பிக்களாக 16 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழகத்தில் 16 எஸ்பிக்கள் சீனியர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு: எஸ்பிக்களாக பணியாற்றி வரும் விஜயகுமார் (திருவாரூர் எஸ்பி), திஷா மிட்டல் (மயிலாப்பூர் துணை கமிஷனர்), துரை (தலைமையிட உதவி ஐஜி), மகேஷ் (அம்பத்தூர் துணை கமிஷனர்), தர்மராஜன் (மத்திய அரசுப் பணி), அபினவ்குமார் (மத்திய அரசுப்பணி), சிபி சக்கரவர்த்தி (சைபர் கிரைம்), சமந்த் ரோகன் ராஜேந்திரா(மத்திய அரசுப் பணி), ஜியாவுல் ஹக் (சிபிசிஐடி), விஜயகுமார் (பொருளாதார குற்றப்பிரிவு), பகலவன் (திருவல்லிக்கேணி துணை கமிஷனர்), சாந்தி (மனித உரிமை ஆணையம்), விஜயலட்சுமி (கமாண்டோ), ஜெயச்சந்திரன் (போலீஸ் அகாடமி), மனோகர் (விருதுநகர் எஸ்பி), வெண்மதி (பட்டாலியன்) ஆகியோர், டிஐஜியாக பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி பெற்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சீனியர் எஸ்பி அந்தஸ்து வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Senior SP, Promotion
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...