புத்தாண்டு கொண்டாட்டம் மக்களுக்கு டிஜிபி நன்றி

சென்னை: விபத்து இல்லாமல் புத்தாண்டு கொண்டாடியதால் பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கிலப் புத்தாண்டு தினம் தமிழகம் எங்கும் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகள் மற்றும் இதர அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

31ம் தேதி இரவு மற்றும் 1ம் தேதி காலை புத்தாண்டு தின கொண்டாட்டங்கள், ஓரிரு சாலை விபத்துகள், ஓரிரு சச்சரவுகள் தவிர தமிழகம் எங்கும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடந்து முடிந்தன. காவல்துறை வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Related Stories: