புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை வெறிச்சோடிய கிழக்கு கடற்கரை சாலை

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நீலாங்கரை காவல் சரக காவல் உதவி ஆணையர் சுதர்சன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கொட்டிவாக்கம் முதல் அக்கரை சந்திப்பு வரையிலும், கானத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் சென்னை-செங்கல்பட்டு மாவட்ட எல்லை பகுதியான முட்டுக்காடு சோதனைச்சாவடி வரையிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் வருபவர்களின் ஆவணங்கள், வேலை செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டைகளை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னர், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த தடையால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், ரெஸ்டாரன்ட்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும், கோயில்கள், தேவாலயங்களில் அதிகாலை முதல் மக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: