கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்தமிழகக் கடற்கரையை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யும்.

நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌, புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, காரைக்கால்‌ பகுதுகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ பிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்குற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ பெரும்பாலான பகுதுகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: