×

10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா; அதிர்ச்சியில் மராட்டிய மாநில அரசு!!

மும்பை : மராட்டியத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரபணு மாற்றம் அடைந்து பரவி வரும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் தொற்று, இந்தியாவிலேயே மராட்டியத்தில் தான் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உத்தவ் தாக்கரே அரசு தீவிரம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அம்மாநில அமைச்சர்கள் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களம் வருகின்றனர்.

இந்த நிலையில், மராட்டிய அமைச்சர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய மராட்டியத்தில் துணை முதல்வர் அஜித் பவார், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். சோதனையின் முடிவில் 10 அமைச்சர்களுக்கும் 20 எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அஜித் பவார், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


Tags : LL ,Korona ,Marathi State Government , அமைச்சர்கள்
× RELATED சி ல் லி பா யி ன் ட்…