×

ஓமிக்ரானால் மூச்சுதிணறல் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பதால் பதற்றம் அடைய தேவையில்லை : டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா

டெல்லி : இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்ததாலும் கடந்த காலத்தில் போன்ற மோசமான சூழல் ஏற்படாது என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ஓமிக்ரான் வைரஸ் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பையே அதிகம் பாதிப்படைய செய்வதாக கூறியுள்ளார்.ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவர், பக்க நோய்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் சாதாரண சிகிச்சையிலேயே குணமடைய முடியும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஆக்சிஜன் குறைந்து மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளை ஓமிக்ரான் ஏற்படுத்தாது என்று அவர் கூறியுள்ளார். தொற்று பரவலில் இருந்து நாம் முழுமையாக விடுபடவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கவனமுடன் பின்பற்றுவதோடு விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது என்று குலேரியா தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் வைரசால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது என்றாலும் சுகாதாரத்துறை அதிகம் முன்னெச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் உள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா சிறந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,AIIMS ,Randip Kuleria , ரந்தீப் குலேரியா
× RELATED அமைச்சர் மா.சுப்பிரமணியன்...