×

காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவில் நெரிசலில் சிக்கி 12 பேர் பலி... ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!!

ஸ்ரீநகர் : காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது.  ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.  இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், டெல்லி, அரியானா, பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பலர்  காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

இந்த நிலையில் காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பக்தர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இறந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.மேலும் வைஷ்ணவி தேவி கோவில் நெரிசலில் சிக்கி இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.அதே நேரம் காயம் அடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Tags : Kashmir Vaishnavi Devi ,PM , வைஷ்ணவி தேவி கோவில்
× RELATED நான் யாரிடமாவது ஆதாயம்...