சோனியா காந்தி உத்தரவு மே.வங்க பொறுப்பாளராக செல்லக்குமார் நியமனம்

புதுடெல்லி: மேற்கு வங்கம், அந்தமான், நிகோபார் தீவுகளின் மாநில காங்கிரசின் மேலிட பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த செல்லக் குமார் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த ஜிதின் பிரசாத் கடந்த ஜூன் மாதம் பாஜ.வில் இணைந்தார். இதையடுத்து, அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில், அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கேசி. வேணுகோபால் நேற்று கூறுகையில், `கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பி.யான செல்லக் குமாரை மேற்கு வங்கம், அந்தமான், நிகோபார் தீவுகளின் மாநில காங்கிரசின் மேலிட பொறுப்பாளராக கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். செல்லக்குமார் ஏற்கனவே வகித்து வரும் ஒடிசா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலும் நீடிப்பார்,’ என்று தெரிவித்தார்.

Related Stories: