×

100 தாக்குதலில் களை எடுத்தது ராணுவம் ஜம்முவில் கடந்தாண்டு 184 தீவிரவாதிகள் காலி

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் கடந்த 2021ம் ஆண்டில் பாதுகாப்பு படைகள் மொத்தம் 100 தாக்குதல்களை நடத்தி, 184 தீவிரவாதிகளை கொன்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதைத் தொடர்ந்து, ராணுவம் கூடுதலாக குவிக்கப்பட்டு, தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டனர். கடந்தாண்டு தீவிரவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 2021ம் ஆண்டில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 44 முக்கிய கமாண்டர்கள், 20 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 184 தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 44 பேரில் 26 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள், 10 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு, 7 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் ஒருவன் அல் பதர் அமைப்பை சேர்ந்தவர்கள். பந்தா சவுக்கில் போலீஸ் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் ஒன்பது பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான 100வது தாக்குதல் வேட்டையை வெற்றிகரமாக முடித்தோம்,” என்றார்.

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் பந்தா சவுக் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மூன்று போலீசாரும், 2 சிஆர்பிஎப் வீரர்களும் காயமடைந்தனர். வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Tags : Army ,Jammu , 100 Attack, Army, Jammu, Terrorists,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...