50,000 இடங்களில் நாளை 17வது மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: இந்தியாவில் 1,200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒமிக்ரான் பாதிப்பு 50ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை முதல் தவணை 87 சதவீதத்தினருக்கும், 2வது தவணை 57 சதவீதத்தினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 17வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Related Stories: