மதுரையில் 12ம் தேதி நடைபெறும் பொங்கல் திருநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: விருதுநகர் விழாவில் 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்கிறார்

சென்னை: மதுரையில் வருகிற 12ம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் விருதுநகரில் நடைபெறும் 11 புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிலும் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக பாஜ சார்பில் ”மோடி பொங்கல்” நிகழ்ச்சி வருகிற ஜனவரி 12ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. மாநில அளவிலாள குழுவில் மாநில துணை தலைவர் ஏ.ஆர்.மஹாலட்சுமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் உமாரதி, மகளிர் அணி மாநில தலைவர் எஸ்.மீனாட்சி, எஸ்.சி. அணி மாநில தலைவர் பொன்.வி.பாலகணபதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் நீலமுரளியாதவ், மாவட்ட தலைவர்கள் மகா.சுசீந்திரன், சரவணன், மேப்பல் சக்திவேல், பி.சி.பாண்டியன், மாவட்ட பிரபாரி ஜி.பி.எஸ்.நாகேந்திரன், மகளிர் அணி மாநில செயலாளர் கவிதா காந்த் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

 விருதுநகரில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில், மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராமநிவாசன் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் மாவட்ட தலைவர்கள் பி.எம்.பால்ராஜ், ராமமூர்த்தி, எம்.கஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஏ.மஹாராஜன், எம்.ராமராஜா ஆகியோர் இடம் பெறுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 12ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 11 புதிய மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: