விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை கைவிடுக: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிமுக ஆட்சிக்காலத்தில் மீட்டர் பொருத்தப்பட்ட போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த பணி நிறுத்தப்பட்டது. மீட்டர் பொருத்துவது எதிர்காலத்தில் இலவச மின்சாரம் என்பது பறிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிடும் வகையில், விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

அதேபோல், பொதுமக்கள் மீது கடும் நிதிச் சுமையை ஏற்றும் வகையில் மின்சார வாரியம் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 2017ம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு வசூலிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவையும் திரும்ப பெற வேண்டும்.

Related Stories: