×

தமிழ் அறிஞர்களுக்கு 'இலக்கிய மாமணி'விருது - விண்ணப்பங்கள் அனுப்பலாம் - தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னை: தமிழ் அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது - விண்ணப்பங்கள் அனுப்பலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் அவர்களால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி  விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பெற்றது.

மேலும் இவ்விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக ரூ.5.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படும். அவ்வகையில் மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளை படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களிடமிருந்து ‘இலக்கிய மாமணி’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சித் துறையின்  www.tamilvalarchithurai.com  என்ற  வலைத்தளத்தில் விருது விண்ணப்பப் படிவம் என்ற பகுதியில் இலவசமாக பதிவிறக்கம்  செய்து  கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள்,  தன்விவரக்  குறிப்புகளுடன் நிழற்படம் (2),  எழுதிய  நூல்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் அந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒருபடி  வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு 04.01.2022 ஆம்  நாளுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பம் மற்றும் பிற இணைப்புகள் மட்டும் tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Development Department , 'Literary Mamani' Award for Tamil Scholars - Applications can be sent - Department of Tamil Development Announcement
× RELATED கனவு இல்ல திட்டத்தின் கீழ் 10...