ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் சுவாமி திருக்கோயிலில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் ஆசிரியர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி  மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அந்த தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர், எழுத்தர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. தலைமை ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 35,000/-, ஆகம ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 30,000/-, எழுத்தர் பணியிடத்துக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 10,000/-, சமையலர் பணியிடத்துக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 12,000/-, சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 10,000/-, வழங்கப்படும்.

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின்படி உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.01.2022, செயல் அலுவலர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணியிட விபரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: