×

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு தீவிரம்

அலங்காநல்லூர்: பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15ம் தேதியும், அலங்காநல்லூரில் 16ம் தேதியும் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற குறுகிய நாட்களே உள்ள நிலையில் அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு மேற்பார்வையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் சீரமைப்பு, காளைகள் சேகரிக்கும் இடம், காளைகளுக்கான உணவு, தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் உள்ளிட்ட பார்வையாளர் மேடை அமையும் இடங்களை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் தேவி மேற்பார்வையில் ஜேசிபி மூலம் மஞ்சமலை ஆற்று திடல், வாடிவாசல் பகுதி சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜல்லிகட்டு விழா குழு சார்பில் வாடிவாசல் வண்ணம் பூசும் பணி பாலமேட்டில் நேற்று தொடங்கியது. பார்வையாளர் அமரும் கேலரி உள்ளிட்ட இடங்களிலும் வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்குவது,ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. பரிசுகளும் இம்முறை அதிகம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினரும் விழா குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

Tags : Jalhikatu ,Palamade ,Aranganallur , Intensity of jallikkattu arrangement at Palamedu, Alankanallur
× RELATED களைகட்டும் பொங்கல் பண்டிகை!:...