×

செஞ்சியில் திடீர் மழை 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தப்பியது

செஞ்சி:  செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று பெய்த கனமழையால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சம்பா அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. அறுவடையான நெல்லை செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள், நேற்று முன்தினம் 11 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.

நேற்று வந்த நெல் மூட்டைகள் காலையில் வியாபாரிகள் விலைப்பட்டியல் அறிவித்து எடை போடும் பணியும் நடைபெற்று முடிந்தது. பின்னர் வியாபாரிகளுக்கு ஏல முறையில் மூட்டைகள் எடுத்துச்செல்லப்படும் பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென செஞ்சி மற்றும் சுற்றுப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் இருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தது. இதனை உடனடியாக தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க போதிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  



Tags : Ginger , Sudden rain in Ginger 10 thousand bundles of paddy escaped
× RELATED காளான் கைமா