×

டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சிலின் 46- வது கூட்டம்: டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கான வரி விகிதம் குறையுமா?

டெல்லி: பொருட்களுக்கான வரி விகிதத்தில் மாற்றம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிப்பதற்காக ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46- வது கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கு சமீபத்தில் உயர்த்தப்பட்ட வரி விகிதம் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. அத்துடன் ஜி.எஸ்.டி தொடர்பாக கடந்த கூட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட இருவேறு அமைச்சர்கள் குழு தாக்கல் செய்யும் அறிக்கைகள் மீதும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

ஜி.எஸ்.டி வரிமுறையில் 12% அடுக்கையும், 18% அடுக்கையும் ஒன்றாக இணைக்க கோரிக்கைகள் வந்திருக்கின்றன. இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருக்க இன்றைய கூட்டத்தில் பல்வேறு மாநில அமைச்சர்களும், நிதித்துறை அதிகாரிகளும் பங்கெடுக்கவிருக்கிறார்கள். நாடு முழுவதுமாக ஒரே வரி விதிப்பை நடைமுறையில் கொண்டுவரும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி எனப்படும் புதிய சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. 5%, 12%, 18% மற்றும் 28% என மொத்தம் 4 அடுக்குகளின் கீழ் பொருட்களும், சேவைகளும் வகைப்படுத்தப்பட்டன.           


Tags : Delhi ,G. ,D Council , Delhi, GST, 46th Meeting, Textiles, Tax, Decline?
× RELATED ஜி பே ஸ்கேன் பண்ணுங்க… மோடி ஸ்கேம் பாருங்க… தெறிக்கவிட்ட போஸ்டர்கள்