×

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தால் உறவு முழுமையாக முறிக்கப்படும்: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால் இருநாட்டு உறவும் முழுமையாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா படை குவிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின் போது உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா படைகளை திரும்பப்பெற வேண்டும் என்று புதினை, ஜோ பைடன் வலியுறுத்தினார். மீறி உக்ரைன் மீது தாக்குதலை ரஷ்யா நடத்துமானால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதை தவிர்க்க முடியாது என்று கடுமையாக எச்சரித்தார்.

ஆனால், இதற்கு பதிலடி கொடுத்த புதின் பொருளாதார தடை என்ற முடிவுக்கு அமெரிக்கா செல்லுமானால், இரு நாட்டு உறவும் முழுமையாக முடிவுக்கு வரும் என்று பதிலடி கொடுத்ததாக ரஷ்ய உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை ஜெனிவாவில் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதை தொடர்ந்து பிரேசில் மற்றும் வியன்னாவில் பேச்சுவார்த்தை தொடரும் என்று புதினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்திருக்கிறார்.          


Tags : Putin ,US ,Russia , US, Russia, sanctions, tensions, Putin warns
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...