×

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம் (மெரினா) 24 செ.மீ. மழை பதிவானது!!

சென்னை: சென்னையில் நேற்று தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தொடர்ந்து பெய்த மழையால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்(அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அத்திவாசிய சேவை வழங்கும் அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது. நந்தனம் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 13 சென்டி மீட்டர் மழை. அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 சென்டி மீட்டர் மழை. அயனாவரத்தில் 18 செமீ மழை, பெரம்பூரில் 16 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் 2 இடங்களிலும் அதி கனமழையும் 6 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதே நேரம், சென்னையில் கனமழை காரணமாக,துரைசாமி சுரங்கப்பாதை; ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை; மேட்லி சுரங்கப்பாதை; ரங்கராஜபுரம் இரு சக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை ஆகிய 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

Tags : Tamil Nadu ,Chennai ,DGP ,Marina , கன மழை,சென்னை
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...