×

தலைநகர் சென்னையை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட சுமார் 14 மாவட்டங்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு!!

சென்னை: சென்னையில் நேற்று தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தொடர்ந்து பெய்த மழையால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்(அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அத்திவாசிய சேவை வழங்கும் அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் சென்னையை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட சுமார் 14 மாவட்டங்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Chengalpattu ,Kanchipuram , சென்னை.திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...