ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்புக்கு ஜன.20 வரை விண்ணப்பம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் வைணவ (வைகானசம்) ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். மாதம் ஒன்றுக்கு ₹3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை www.hrce.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில், பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம். கடைசி நாள் 20.1.2022. இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: