×

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடிகை சன்னிலியோன் பேனரை கிழித்து துறைமுகம் முற்றுகை: போலீசுடன் பல்வேறு அமைப்பினர் தள்ளுமுள்ளு

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பழைய துறைமுகத்தில்  கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்கும்  நடன நிகழ்ச்சி இன்று இரவு  நடக்கிறது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு பலவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி  புதுச்சேரி இளைஞர்களும் அதிகளவில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக  தெரிகிறது.

இதனிடையே புதுச்சேரி  கொண்டாட்டத்தில் நடிகை சன்னிலியோன் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழர் களம் அழகர் தலைமையில் பல்வேறு அமைப்பினர் திடீரென முற்றுகையில்  ஈடுபட்டனர். அவர்கள் நடன நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்ததால் பரபரப்பு  ஏற்பட்டது. போராட்டத்துக்கு தந்தை பெரியார் திக இளங்கோ, மாணவர் கூட்டமைப்பு  சுவாமிநாதன், நாம் தமிழர் கட்சி கெளரி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்  பிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பேனர்  கிழிப்பை போலீசார் தடுத்த  நிலையில் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது போலீசாரும், போராட்டக்குழுவினரும் ேராட்டில் உருண்டு புரண்டனர். பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார்,  ஒதியஞ்சாலை காவல் நிலையம் அழைத்துச்  சென்றனர்.

Tags : Sunilyon ,New Year ,Pondicherry Port , Actress Sunilyon tears down banner at New Year celebrations in Pondicherry
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?