×

ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத உற்சவங்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு உற்சவங்கள் நடக்கும். அதன்படி, வருகிற ஜனவரியில் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது. இதில், 2-ம் தேதி விசேஷ உற்சவம்,  13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி, கோயில் சந்நிதியில் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. 14-ம் தேதி வைகுண்ட துவாதசி, தெப்பகுளத்தில் சக்கரத்தீர்த்த முக்கொட்டி, ஜனவரி 15-ம் தேதி மகர சங்கிராந்தி, 16 அன்று கோதா பரிணயோற்சவம், வாரி பார்வேட்டை உற்சவம்,  17-ம் தேதியன்று ராமகிருஷ்ண தீர்த்த முக்கொட்டி, 18-ம் தேதி பிரணய கலகோற்சவம் நடக்கிறது.

இதுதவிர, 22-ம் தேதி பெரிய சாத்துமுறை, வைகுண்டம் வழியாக திருமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படும் சொர்க்கவாசல் தரிசனம்  நிறைவு பெறுகிறது. வாரி கோயிலில் ஜனவரி 26-ம் தேதி அத்ஹாயன உற்சவங்கள் நிறைவு பெறுகிறது. 27 ம் தேதி திருமலை நம்பி சந்நிதிக்கு செல்லும் மலையப்ப சுவாமி உற்சவர் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது.

Tags : Ezhumalayan Temple , January festivities at the Ezhumalayan Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு...