பதிவுத்துறை ஐஜியின் நேர்முக உதவியாளர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவுத்துறை ஐஜி நேர்முக உதவியாளர் உட்பட 2 டிஐஜிக்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறை ஐஜியின் நேர்முக உதவியாளர் (டிஐஜி) சுதா மல்யா, வேலூர் மண்டல டிஐஜியாகவும், வேலூர் மண்டல டிஐஜி அருள்சாமி பதிவுத்துறை ஐஜி நேர்முக உதவியாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர். இடமாறுதல் செய்யப்பட்ட டிஐஜிக்கள் பணி விடுப்பு, பணி சேர் அறிக்கைகள் மற்றும் பொறுப்பு மாற்று சான்றினை உடன் அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: