×

சாத்தூர் அருகே பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

சாத்தூர்: சாத்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வைப்பாறும், அர்ச்சுனா நதியும் இணையும் இடத்தில் இருக்கன்குடி அமைந்துள்ளது. இதிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அர்ச்சுனா நதியின் கிழக்கு பகுதியில் உள்ள நத்தத்துபட்டியில் கி.பி.9ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முற்காலப்பாண்டிய மன்னன் மாறன் வல்லபன் காலத்து (கி.பி.815-862) கல்வெட்டு ஒன்றும், அவ்வூரிலேயே கி.பி.12ம் நூற்றாண்டுச் செக்குக்கல் வெட்டொன்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரான முருகன் கொடுத்த தகவலின்பேரில், கல்லூரி உதவி பேராசிரியரும், தொல்லியல் கள ஆய்வாளருமான ரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:பாண்டிய நாட்டில், முற்காலப் பாண்டிய மன்னன் மாற வல்லபனின் அதிகாரியாகவும், இருப்பைக்குடியை தலைநகராகக் கொண்ட ‘இருஞ்சோணாட்டின்’ தலைவனாகவும் விளங்கியவன் எட்டிச்சாத்தன். அவனுக்கு ‘இருப்பைக்குடிகிழவன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்த இருப்பைக்குடி தற்பொழுது ‘இருக்கன்குடி’ என அழைக்கப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்வெட்டில் இரண்டு வரிகளில் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட 9ம் நூ
ற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு அங்குள்ள கோயில் ஒன்றுக்கு இருப்பைக்குடி கிழவன் திருப்பீடம் அமைத்துத் தந்ததை தெரிவிக்கின்றது. கல்வெட்டு வாசகம் (வட்டெழுத்து)  இருப்பைக்குடி கிழவன் செய்வித்த திருப்பீடமாக உள்ளது, என்றார்.

Tags : Sattur , Discovery of ancient inscriptions near Sattur
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது