ஓமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே ஒரே வழி :உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி

ஜெனீவா : ஓமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே ஒரே வழி என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் பேசிய அவர், தடுப்பூசிகளுக்கு ஓமிக்ரானை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளதாக கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் டி செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாக கூறியுள்ள சௌமியா சாமிநாதன், இந்த நோய் எதிர்ப்பு சகதி ஓமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்வதாக கூறியுள்ளார்.

மருத்துவமனைகளில் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சனை என எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி என்றும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்வது கடுமையான நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்றும் சௌமியா சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களையும் ஓமிக்ரான் பாதித்தாலும் ஓமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்பட்டு மரணத்தில் இருந்து நம்மை காக்கிறது என்றும் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். யாரேனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இருந்தாலும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related Stories: