×

கொப்பனாபட்டி ஊராட்சியில் சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் கழுத்தளவு தண்ணீரில் சவ ஊர்வலம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி ஊராட்சியில் சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் கழுத்தளவு தண்ணீரில் பிணத்தை நீந்தி சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி ஊராட்சி ரெட்டியபட்டி சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் கண்மாய்க்குள் சென்று வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று ரெட்டியபட்டியில் ஒருவர் இறந்துள்ளார். இதனையடுத்து நீண்ட தூரம் உள்ள சுடுகாட்டிற்கு கண்மாய் நிரம்பியுள்ள கழுத்தளவு தண்ணீரில் நீந்திசென்று இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த சுடுகாட்டிற்கு நிரந்தரமாக பாதை வசதி செய்துதர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை இதற்கான முயற்சி எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதுபோன்று பொன்னமராவதி பகுதியில் நிறைய சுடுகாட்டிற்கு பாதை வசதியில்லை. தனியார் பட்டாக்காட்டிற்குள் செல்வதால் பிரச்னை ஏற்படுகிறது. கண்மாய் குளங்களில் மழைகாலங்களில் செல்லமுடியாத நிலை மற்றும் சுடுகாட்டில் அடிப்படை வசதியில்லாத நிலை இப்பகுதியில் உள்ள 90 சதவீத சுடுகாட்டின் நிலை இதுவாகவே உள்ளது. இதனை அரசு கருத்தில் கொண்டு அனைத்து சுடுகாட்டிற்கும் பாதை வசதி மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பிரதாப்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.



Tags : Koppanapatti , neck
× RELATED கொப்பனாபட்டியில் ரூ.9.05 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்