மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் பயங்கரம்: ஊழியரை சுட்டு கொன்று வங்கியில் பணம் கொள்ளை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள தகிசர் மேற்கில் ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியா வங்கி உள்ளது. நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வங்கி மூடப்படும்  நேரத்தில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் உள்ளே  புகுந்து பணத்தை கொள்ளையடித்தனர். அவர்களை ஒப்பந்த ஊழியர் சந்தேஷ்  கோமரே (25) தடுக்க  முயன்றார். ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில், கோமரேவும் மற்றொருவரும் காயம் அடைந்தனர். கொள்ளையர் பணத்துடன் தப்பினர்.

போலீசார் விரைந்து வந்து கோமரே உள்ளிட்ட  இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், கோமரேவை இறந்தார். மற்றொரு ஊழியருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க  போலீசார் தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: