ஆசிய வலுதூக்கும் போட்டி: சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா வெண்கலம் வென்று அசத்தல்

சென்னை: ஆசிய வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆசிய வலுதூக்கும் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட 70 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

140 கிலோ எடை தூக்கும் போட்டியில் பங்கேற்ற  எம்எல்ஏ ராஜா வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆசிய போட்டியில் வென்றதன் மூலமாக, நியூசிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: