×

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே சாலை விரிவாக்க பணி: அதிகாரி ஆய்வு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் முதல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வரை சாலை விரிவாக்க பணிகள் கடந்தாண்டு தொடங்கியது. முதற்கட்டமாக சதுரங்கப்பட்டினத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சாலை பணி முடிந்து, போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
2ம் கட்டமாக செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை சாலை விரிவாக்க பணி மற்றும் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

சென்னை- கன்னியாகுமரி தொழிற் தட திட்டத்தின் மூலம் நடைபெறும் இச்சாலை பணிகளை தலைமை பொறியாளர் எம்கே செல்வன், காஞ்சிபுரம் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது சாலையோரத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயை தரத்துடன், விரைவாக அமைக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார். இதில் கண்காணிப்பு பொறியாளர் செல்லதுரை, கோட்ட பொறியாளர் லட்சுமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chengalpattu ,Kanchipuram , Road widening work between Chengalpattu - Kanchipuram: Official inspection
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...