திருவொற்றியூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு வாடகை வீடுகளை எடுத்து தங்க வைக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவொற்றி யூரில்  அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததால் நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இருப்பினும் வீடுகளை இழந்த மக்கள் அனைவரும், கூலித்தொழிலாளர்கள் என்பதால் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அப்பகுதியிலேயே அவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கித்தர முன்வர வேண்டும். அதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசே வாடகைக்கு வீடுகளை எடுத்து அவர் களை குடியமர்த்த வேண்டும். தற்போது தங்க இடமில்லாமல் தவிப்பதால் உடனடியாக வாடகை வீடுகளில் அவர்களை தங்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக சார்பில் களத்தில் ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை  நேரில் சந்தித்து அவர்களின் உண்மை நிலை பற்றி கேட்டறிந்தோம். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: