அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு தொழில்நுட்ப கல்வித்துறை பணியாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொழில்நுட்ப கல்வித்துறை பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்/எஸ்டி பணியாளர் நல சங்கத்தின் தலைவர் மணிமொழி, பொதுச் செயலாளர் மகிமை தாஸ்: அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த 14% அகவிலைப்படியை 1.1.2022 முதல் உயர்த்தியும், பொங்கல் பரிசு வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்காக தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்/எஸ்டி பணியாளர் நல சங்கம் சார்பில் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட இதர கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள்:  தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர்கள்  தலைமைச் சங்கம் சார்பில் மாநில  தலைவர் எம்.சுப்பிரமணி, பொதுச் செயலாளர் டி.வெங்கடாசலபதி, பொருளாளர் ஜி.வேல்முருகன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பி.மனோகரன், மாவட்ட  செயலாளர் ஸ்டாலினி, கொள்கை பரப்பு செயலாளர் எம்.முருகன் ஆகியோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர்  இரவு, பகலாக ஓய்வின்றி மக்கள் பணியாற்றி வருகிறீர்கள். இந்த பணியில்  நாங்களும் இணைந்து ஓய்வின்றி உழைத்து வருகிறோம். தங்களை நேரில் சந்தித்து  நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.  அதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்கிய முதல்வருக்கு  சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என  கூறியுள்ளனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க தலைவர் சண்முகராஜா: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 14 சதவீதம் (30 சதவீதம்) அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனசாக டி பிரிவு ஊழிர்களுக்க ரூ.3 ஆயிரம், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500ம், சிறப்பு கால முறை பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000ம் வழங்க உத்தரவிட்டு அரசு ஊழியர் ஆசிரியர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 லட்சம் அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 10 ஆயிரம் சாலை பணியாளர்களின் குடும்பங்களின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாநிலபொதுச்செயலாளர் ராமமூர்த்தி: சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுநாள் வரை வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியான 14 சதவீதம்   வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீதமுள்ள ஊதிய நிலுவைகளையும் வழங்கி, எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். மேலும் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை மற்றும்  நீர்வளத்துறை  சங்கம் சார்பாக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Related Stories: