மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் 3 நாள் குளிக்க தடை

வி.கே.புரம்: கொரோனா, ஒமிக்ரான் பரவலை தடுக்க நாளை மறுதினம் (டிச. 31) முதல் ஜன. 2ம்தேதி வரை மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனாவின் அடுத்து உருமாற்றமான ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வரும் 31ம் தேதி முதல் ஜன. 2ம் தேதி வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ டிச. 31 முதல் ஜனவரி 2ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் கலந்தாலோசித்து புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: