×

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று விகிதம் உயர்வு: ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தினசரி தொற்று 3 லட்சத்தை கடந்திருப்பது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாவே கொரோனா கிருமி தனது பிடியை இறுக்கி வருகிறது. அங்கு தினசரி தொற்று 1 லட்சமாக இருந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 1,799 கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

டெல்டா வகை கொரோனா தொற்று அதிகரித்திருப்பதை அடுத்து சோதனைக்காக அமெரிக்க முழுவதுமாக பரிசோதனை மையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொரோனா சோதனை மைய நிர்வாகிகள் திணறி வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மக்கள் கூட்டம் கூட்டமாக மக்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்றதனால் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்திருப்பதை அடுத்து தடுப்பூசி நடவடிக்கைகளை பைடன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தென்னாபிரிக்க, சவுதி , போஸ்வானா, ஜிம்பாம்வே, நபிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த பயணத்தடையை விளக்கி கொண்டிருப்பதாக வெள்ளைமாளிகை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் பயணத்தடையை ஜோ பைடன் நீக்கியிருப்பது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Tags : United States ,Christmas , America, Christmas, Corona Infection,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்