ஆசிய கோப்பை யு.19 கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா-வ.தேசம் மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை அரையிறுதி போட்டிகள் நடக்கிறது. நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் இந்தியா-வங்கதேசம், பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. நேற்று வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதிய கடைசி லீக் போட்டியில் 32.4 ஓவர்கள் வீசப்பட்டநிலையில், 2 அதிகாரிகள் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து ஏ பிரிவில் முதல் 2 இடம் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, பி பிரிவில் வங்கதேசம், இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Related Stories: