×

மின்வாரிய பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா காரணமாக தமிழ்நாடு மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் வரும் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்/தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2020 முதல் ஆறுமாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். …

The post மின்வாரிய பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Energy Minister ,Sendilbalaji ,Tamil Nadu Electricity Board ,Corona ,Dinakaraan ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?