கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி: ஹெலிகாப்டர் சகோதரர் சாமிநாதனுக்கு ஜாமீன்

மதுரை: கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர் சாமிநாதனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சகோதரர் என அழைக்கப்படும் சாமிநாதனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளையானது உத்தரவிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் சகோதரர் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தை சேர்ந்த சாமிநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்கிறார். அதில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் தற்போது வரை சிறை காவலில் இருந்து வருவதாகவும் வழக்கில் 12 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாக கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. கைது செய்து 150 நாட்களை கடந்த நிலையில் இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, சுவாமிநாதனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: