×

ஹேப்பி நியூஸ்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு..முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களான மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டிருக்கிறது. 2022ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினம் முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்திருக்கிறார்.  பெட்ரோல், டீசல் விலை குறைப்பை புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு தொடங்கி வைத்தது. ஒன்றிய அரசும் சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து, பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விலை குறைப்பை முன்னெடுத்து வந்தன.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசு இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என்று மிகப்பெரிய விலை குறைப்பை அறிவித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க விலை குறைப்பு அறிவித்திருப்பதாக ஹேமந்த் சோரன் குறிப்பிட்டிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.48 ஆக இப்போது இருக்கிறது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு பெட்ரோலிய விலையை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Jharkhand ,Chief Minister ,Hemant Soren , Jharkhand, two-wheeler, petrol prices
× RELATED ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி