×

35 பேரை கொன்று எரித்த விவகாரம் மியான்மர் நடிகர் சிறையில் அடைப்பு: ராணுவத்தை எதிர்த்து போராடியதால் நடவடிக்கை

நய்பிடாவ்: மியான்மர் ராணுவத்தால் 35 பேரை கொன்று எரித்த விவகாரத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அந்நாட்டு நடிகர் பைங் டேக்ஹோன் சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த வாரம் மியான்மர் நாட்டின் கயா மாநிலத்தில் பெண்கள்,  குழந்தைகள் உட்பட 35 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு, அவர்களின்  உடல்கள் வாகனத்தில் வைத்து அந்நாட்டு ராணுவம் எரித்தது. இந்த சம்பவத்திற்கு  கரேனி மனித உரிமைகள் குழு உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் மியான்மர் ராணுவ அட்டூழியங்களை கண்டித்து பிரபல பர்மிய நடிகர் பைங் டேக்ஹோன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

தடையை மீறி போராட்டம் நடத்துவதாக கூறி பைங் டேக்ஹோனை அந்நாட்டு ராணுவம் சிறையில் அடைத்துள்ளது. இதுகுறித்து பைங் டேக்ஹோனின் சகோதரியால் தனது பேஸ்புக் பதிவில், ‘பைங் டேக்ஹோன் மீண்டும் கைது செய்யப்பட்டார். ராணுவ வாகனத்தில் வந்த கிட்டத்தட்ட 50 வீரர்கள், பைங் டேக்ஹோனை அவரது வீட்டிலிருந்து கைது செய்தனர்’ என்று தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பைங் டேக்ஹோன், பர்மிய மாடல், நடிகர், பாடகர் போன்ற பல தளங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டில் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த அவர், சர்வதேச படங்களில் நடித்துள்ளார். 2019ல் தி மியான்மர் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட டாப் 10 நடிகர்கள் பட்டியலில் பைங் டேக்ஹோன் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Myanmar , Murder, Myanmar actor, imprisonment, army, struggle, action
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்