×

மதுரை மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல்: கற்களை வீசியதால் சிறைக்கு அருகேயுள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசியுள்ளனர். கைதிகள் கற்களை வீசியதால் மதுரை சிறைக்கு அருகேயுள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு தரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையின் சுவரின் மீது ஏறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கிருக்கக்கூடிய கற்களை மதுரை மத்திய சிறை சாலையிலும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதால் மிகுந்த பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடிய சிறைக்கைதிகள் தங்களது உடலில் பிளேடால் கீறிய படியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினை தாக்க முயன்றுள்ளதாகவும் அந்த தாக்குதலுக்கு பயந்து அவர்கள் சுவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறைத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி மேலே ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழே இறங்கி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று கடந்த 2019ஆம் ஆண்டும் சிறைக்கைதிகள் சுவரின் மீது ஏறி கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி போராட்டம் நடத்தியுள்ள நிலையில் தற்போது அதேபோன்று ஒரு போராட்டத்தில் சிறைக்கைதிகள் ஈடுபட்டுள்ளது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை காவல்துறையினர் அந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாலையில் செல்லக்கூடிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai Central Jail , madurai, prison
× RELATED மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்