×

கான்பூர் வாசனை திரவிய வியாபாரி வீட்டில் மேலும் ரூ.19 கோடி ரொக்கம் பறிமுதல்!: பியூஷ் ஜெயின் எந்த கட்சிக்கு ஆதரவாளர் என உ.பி. அரசியல் களத்தில் மோதல்..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த வானை திரவிய வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில் இருந்து மேலும் 19 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கான்பூரை சேர்ந்த வியாபாரி பியூஷ் ஜெயின் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியதால் அவருடைய வீடு, அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குனரக குழுவினர் 5 நாட்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் 257 கோடி ரூபாய் பணம், 23 கிலோ தங்கம், கான்பூர், காண்ணோச், மும்பை, டெல்லி மற்றும் துபாயில் உள்ள 16 சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

நாடு முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வரி ஏய்ப்பு மோசடியில் கான்பூரில் உள்ள பியூஷ் ஜெயினின் சொகுசு பங்களாவில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இதில் 19 கோடி ரூபாய் ரொக்கம், தங்க ஆபரணங்கள் பிடிபட்டதாக ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

வியாபாரி பியூஷ் ஜெயின் எந்த கட்சிக்கு நெருக்கமானவர் என்ற பிரச்சனையும் உத்திரபிரதேச அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கான்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆட்சி காலத்தில் ஊழல் வாசனை அடித்ததின் அடையாளமே ரெய்டு என விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த அகிலேஷ், பாஜக ஆதரவாளர் என தெரியாமல் பியூஷ் ஜெயின் வீட்டில் புலனய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியாக கூறினார்.


Tags : Kanpur , Kanpur perfume dealer, 19 crore, Piyush Jain
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை