திண்டுக்கல் மாவட்டத்திற்கு 1,05,170 இலவச வேட்டி, சேலை ஒதுக்கீடு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்க 1 லட்சத்து 5 ஆயிரத்து 170 வேஷ்டி, சேலைகள் வந்துள்ளது.தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 170வேஷ்டி, சேலைகள் வந்துள்ளது.

இதனை ஒவ்வொரு தாலுகா அலுவலகத்துக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வார்டு வாரியாக பிரித்து அனுப்பப்படும்.திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்திற்கு 73 ஆயிரத்து 314 சேலைகளும், 76 ஆயிரத்து 363 வேஷ்டியும்,திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு 64 ஆயிரத்து 586 சேலைகளும், 64 ஆயிரத்து 581 வேட்டிகளும், ஆத்தூர் தாலுகாவிற்கு 42 ஆயிரத்து 654 சேலைகளும், 42 ஆயிரத்து 642 வேஷ்டிகளும், நிலக்கோட்டை தாலுகாவிற்கு 68 ஆயிரத்து 915 சேலைகளும், 68 ஆயிரத்து 877 வேஷ்டிகளும், நத்தம் தாலுகாவிற்கு 33 ஆயிரத்து 203 சேலைகளும், 33 ஆயிரத்து 201 வேஷ்டிகளும், பழநி தாலுகாவிற்கு 69 ஆயிரத்து 87 சேலைகளும், 69 ஆயிரத்து 558 வேஷ்டி களும்,ஒட்டன்சத்திரம் தாலுகாவிற்கு 51 ஆயிரத்து 293 சேலைகளும், 51 ஆயிரத்து 289 வேஷ்டிகளும், வேடசந்தூர் தாலுகாவிற்கு 43 ஆயிரத்து 987 சேலைகளும், 43 ஆயிரத்து 992 வேஷ்டிகளும், குஜிலியம்பாறை தாலுகாவிற்கு 23 ஆயிரத்து 885 சேலைகளும், 23 ஆயிரத்து 885 வேஷ்டிகளும், கொடைக்கானல் தாலுகாவிற்கு 28 ஆயிரத்து 429 சேலைகளும், 28 ஆயிரத்து 429 வேஷ்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை உள்வட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: