தேவாரம் பகுதியில் பனியால் மல்லிகை சாகுபடி பாதிப்பு

தேவாரம் : தேவாரம் பகுதியில் கொட்டும் பனியால் மல்லிகை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி, கோம்பை, தேவாரம், ஆண்டிபட்டி, ஆகிய ஊர்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளன. இப்பகுதியில் பூக்கள் சாகுபடி அதிகமாக நடக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் பனி கொட்டுகிறது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஊர்களில் குளிர் அதிகமாக உள்ளது. இதனால், பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தேனி மாவட்டத்தில் பனி, கொட்டுவதால், தேவாரம் பகுதியில் மல்லிகை பூக்கள் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக பனிக்கு மல்லிகை மொட்டுக்கள் கருகி வருகின்றன. பூக்கள் பறிக்க முடியவில்லை.இதுகுறித்து பூ விவசாயிகள் கூறும்போது: கடும் பனியால் பூக்கள் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மல்லிகை பூக்கள் விவசாயம் அதிகமாக பாதிப்படைகிறது. பனிக்காலத்தில் மொட்டுக்களிலேயே கருகிவிடும். இதனால், மல்லிகை பூக்கள் விலை உயரும். குறிப்பாக முகூர்த்த காலங்களில் மல்லிகை அபரிதமான விலை உயர்வாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: